*Magnify*
SPONSORED LINKS
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2290287-Swami-Vivekananda
Printer Friendly Page Tell A Friend
No ratings.
Rated: E · Poetry · Other · #2290287
Swami Vivekananda
வீரனே!
தீரனே!
இசையரசனே!
புலவனே!

உலகம் சுற்றிய வாலிபனே!

உம்மை சுற்றுகிறது உள்ளங்களனைத்துமே!

சுட்டித் தனத்தில்
கெட்டியான விளையாட்டு வீரனே!

சட்டம்பி சுவாமிகளால் அறிந்தோமே
உமது குரல்வளத்தை...

சன்னியாசம் பெற்று
உலகைச் சுற்றினாயே!

சமஸ்கிருதத்தில் புலமை
உடையவரே! பண்டிதரே!

சாந்தம் கொள்வாய்
தண்ணீரடியில் தியானத்திலே!

சிறுவயதிலே தியானத்தில்
திளைத்த சாந்த சொரூபமே!

சிந்தையில் சிதறா
ஊக்கத்தை கொண்டவரே!

சீடருள் சிறந்தவராய்
குருவையே ஈர்த்தாயே!

சுழற்காற்றாய் சுற்றினாயே உலகெங்கும்...

சூத்திரம் அளித்தாயே வாழ்விற்கு
உளம் நலமும் வளமும் பெறுவதற்கே!

செயற்கரிய சேவையினாலே உதவினாயே!

சேவையில் திளைத்து மகிழ்ந்த மகேசனே!

சைவத்தில் மீறினாலும் பாவத்தை
ஏற்றுக் கொள்கிறேன் என்றாயே!

சௌந்தர்ய கட்டு
உடைய சந்நியாசியே!

சேட்டையில் சுட்டி சிறுவனாய்
அசற வைக்கும் அறிவிலே
நினைவாற்றலால் ஆசிரியரையே
ஆச்சரியத்தில் ஆழ்த்தினாயே!

விரிவடைந்த இருதயம் கொண்டவரே
உண்மை ஞானம் கொண்டவரே

அசராமல் கேள்விகளால் ஆனந்தமளித்தாயே குருவை
உம்மை போலவே உமது சீடையும்
கேள்விகளால் மூழ்கினாயே...

கல்வியறிவு அனுபவறிவை மட்டும்
செல்வமாக பயணத்தில் கொண்டு சென்றவரே...

செல்லும் இடமெல்லாம்
சுற்றிலும் பெருந்திரளே!

கூட்டத்திலிருந்து தப்பித்தாலும்
மனங்களிலிருந்து தப்பவில்லையே!

சொற்பொழிவில் அறிமுகமாகி
அழியா இடம் பெற்றாயே!

சோதியாய் இருக்கிறாயே
பொன்மொழிகள் மூலமாய்...

பயணித்து திரும்புகையிலே திருவல்லிக்கேணியிலே உம்மோடு பேசவே
நவராத்திரி போலே
ஊரெங்கும் கூடியதே
இப்போது உம்முடைய
நினைவு இல்லமாய்... மனதிலே

பேலூரில் சரணடைந்தீரே விவேகானந்தரே...
© Copyright 2023 ர மலர்கொடி (r.malarkodi at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Log in to Leave Feedback
Username:
Password: <Show>
Not a Member?
Signup right now, for free!
All accounts include:
*Bullet* FREE Email @Writing.Com!
*Bullet* FREE Portfolio Services!
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2290287-Swami-Vivekananda