![]() |
true thing |
| திறன்பேசி தில்லை ஆக்கொல்லியாய் கொல்லும் திறன்பேசி திறக்க... அல்லும் பகலும் அயராது அலைபேசியில் இருக்க... சொல்லும் பொருளும் அரைகுறையாக செயலியில் கிடக்க... கண்ணும் கரமும் விலகாது கைபேசியைத் தேட... தொல்லை வெல்ல பரிசாக தொலைபேசி கொடுக்க... எல்லாவற்றையும் மறந்தாலும் மறப்பதில்லை நுண்ணறிபேசி பார்க்க... வேலைகள் செல்லும் தூரம் செல்(ஐ) எடுக்க பயணத்தை ரசிக்காது நகர்விலும் நகர்பேசி பயன்பாடே... ர.மலர்கொடி |