*Magnify*
SPONSORED LINKS
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2289489-
Rated: E · Poetry · Writing.Com · #2289489
true thing
திறன்பேசி

தில்லை ஆக்கொல்லியாய் கொல்லும்
திறன்பேசி திறக்க...

அல்லும் பகலும் அயராது அலைபேசியில் இருக்க...

சொல்லும் பொருளும் அரைகுறையாக செயலியில் கிடக்க...

கண்ணும் கரமும் விலகாது கைபேசியைத் தேட...

தொல்லை வெல்ல பரிசாக தொலைபேசி கொடுக்க...

எல்லாவற்றையும் மறந்தாலும் மறப்பதில்லை நுண்ணறிபேசி பார்க்க...

வேலைகள் செல்லும் தூரம் செல்(ஐ) எடுக்க
பயணத்தை ரசிக்காது நகர்விலும் நகர்பேசி பயன்பாடே...


ர.மலர்கொடி
© Copyright 2023 ர மலர்கொடி (r.malarkodi at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2289489-