*Magnify*
SPONSORED LINKS
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2290361--
Rated: E · Poetry · Environment · #2290361
இயற்கையைக் காப்போம்.
தேனகம் கானகமே...

கானகம் காத்தால்
வானகம் பொழிய
பானகம் அருந்துவாய்...

வாகனம் பெருத்தால்
ககனம் அமிலமாகி
தகனம் செய்யப்படுவாய்...

தேன(அ)கமே கானகமே...
தரணியின் அகமே...
உலக உயிர்களின் அங்கமே...
உயிர்வளியும் உன் பாகமே...
என்றும் செய்யோம் பாதகமே...
யாம் உமக்கு சாதகமே...
தீர்ப்பாய் தாகமே...
சரண் உமது பாதமே...



அருஞ்சொற் பொருள்:
கானகம்- காடு
வானகம்- வானம், ஆகாயம்
பானகம்- நீர்
ககனம்- மேகம்
தரணி- உலகம்
உயர்வளி-காற்று(ஆக்ஸிஜன்)
© Copyright 2023 ர மலர்கொடி (r.malarkodi at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2290361--